Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

காப்பார் உன்னைக் காப்பார்


    • காப்பார் உன்னைக் காப்பார் 
    • பல்லவி 
    • காப்பார் உன்னைக் காப்பார் 
    • காத்தவர் காப்பார் , இன்னும் இனிமேல் காத்திடுவார்
    • கலங்காதே மனமே --- காத்திடுவார் 

    • சரணங்கள்
    • 1. கண்டுனை அழைத்தவர் கரமதைப்பார் , அவர் கைவிடாதிருப்பார்
    • ஆண்டுகள் தோறும் உனக்கவர் அளித்த ஆசிகளை எண்ணிப்பார்
    • என்ணிப்பார் , என்ணிப்பார் , எண்ணிப்பார்
    • ஒன்றொன்றாயதை எண்ணிப்பார் --- காப்பார்

    • 2. இஸ்ரவேலுக்கு வாக்குப்படி இன்பக் கானான் அளிக்கவில்லையோ
    • இப்போதிவர்களை நிர்மூலம் செய்வதென்று பின்னும் இரங்கவில்லையோ
    • இல்லையோ , இல்லையோ , இல்லையோ
    • மனஸ்தாபம் கொள்ளவில்லையோ --- காப்பார்

    • 3. வீழ்ச்சியில் விழித்துன்னை மீட்பவரும் இகழ்ந்துவிடாது சேர்ப்பவரும்
    • சிற்சில வேளையில் சிட்சையினாலுன்னைக் கிட்டியிழுப்பவரும்
    • ஜெயமும் , கனமும் , சுகமும்
    • இரக்கமா யுனக்களிப்பவரும் --- காப்பார்

    • 4. தாயின் கட்டில் வருமுன் உனக்காய்த் தாமுயிர் கொடுத்தவரே
    • காயீனைப் போலுனைத் தள்ளிவிடாது கை கொடுத்தெடுத்தவரே
    • அன்பு கொண்டு மணந்தவரே --- காப்பார்

    • 5. ஆதரவாய்ப் பல ஆண்டுகளில் பரன் அடைக்கலமாயிருந்தார்
    • காதலுடன்னவர் கைப்பணி செய்திடக் கனிவுடனாதரித்தார்
    • பரிசுத்தத்தில் லங்கரித்தார் --- காப்பார்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 553 times