Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எனக்கொத்தாசை வரும்


    • எனக்கொத்தாசை வரும்
    • பல்லவி 
    • எனக்கொத்தாசை வரும் பர்வதம் நேராய்
    • என் கண்களை ஏறெடுப்பேன்

    • சரணங்கள்
    • 1. வானமும் பூமியும் படைத்த
    • வல்ல தேவனிடமிருந்து
    • எண்ணுக்கடங்கா நன்மைகள் வருமே
    • என் கண்கள் ஏறெடுப்பேன் --- எனக்

    • 2. மலைகள் பெயர்ந்தகன்றிடினும்
    • நிலைமாறி புவியகன்றிடினும்
    • மாறிடுமோ அவர் கிருபை எந்நாளும்
    • ஆறுதல் எனக்கவரே --- எனக்

    • 3. என் காலைத் தள்ளாட வொட்டார்
    • என்னைக் காக்கும் தேவன் உறங்கார்
    • இஸ்ரவேலைக் காக்கும் நல் தேவன்
    • இராப்பகல் உறங்காரே --- எனக்

    • 4. வலப்பக்கத்தில் நிழல் அவரே
    • வழுவாமல் காப்பவர் அவரே
    • சூரியன் பகலில் சந்திரன் இரவில்
    • சேதப்படுத்தாதே ---எனக்

    • 5. எத்தீங்கும் என்னை அணுகாமல்
    • ஆத்துமாவைக் காக்குமென் தேவன்
    • போக்கையும் வரத்தையும் பத்திரமாக
    • காப்பாரே இது முதலாய் ---எனக்
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1671 times