Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஊற்றுத் தண்ணீரே எந்தன்


    • ஊற்றுத் தண்ணீரே எந்தன்
    • ஊற்றுத் தண்ணீரே எந்தன் தேவ ஆவியே
    • ஜீவ நதியே என்னில் பொங்கிப் பொங்கிவா (2)
    • ஆசீர்வதியும் என் நேசக் கர்த்தரே
    • ஆவியின் வரங்களினரல் என்னை நிரப்பும்

    • 1. கன்மலையைப் பிளந்து வனாந்திரத்திலே
    • கர்த்தாவே உம் ஜனங்களின் தாகம் தீர்த்தீரே
    • பள்ளத்தாக்கிலும் மலைகளிலும்
    • தண்ணீர் பாயும் தேசத்தை நீர் வாக்களித்தீரே --- ஊற்று

    • 2. ஜீவத் தண்ணீராம் எந்தன் நல்ல கர்த்தாவே
    • ஜீவ ஊற்றினால் என்னை நிறைத்திடுவீர்
    • கனி தந்திட நான் செழித்தோங்கிட
    • கர்த்தரின் கரத்தால் நித்தம் கனம் பெற்றிட --- ஊற்று

    • 3. திறக்கப்பட்டதாம் ஊற்று சிலுவையிலே
    • இரட்சகரின் காயங்கள் வெளிப்படுதே
    • பாவக்கறைகள் முற்றும் நீங்கிட
    • பரிசுத்தர் சமுகத்தில் ஜெயம் பெற்றிட --- ஊற்று

    • 4. கிருபையின் ஊற்றுகள் பெருகிடவே
    • புதுபெலன் அடைந்து நான் மகிழ்ந்திடவே
    • பரிசுத்தத்தை பயத்துடனே
    • பூரணமாக்கிட தேவ பெலன் தாருமே --- ஊற்று

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1331 times