Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உயிர்த்தெழுந்தாரே


    • உயிர்த்தெழுந்தாரே
    • பல்லவி 
    • உயிர்த்தெழுந்தாரே அல்லேலூயா
    • ஜெயித்தெழுந்தாரே
    • உயிருடன் எழுந்த மீட்பர் இயேசென்
    • சொந்தமானாரே 

    • சரணங்கள்
    • 1. கல்லறை திறந்திடவே
    • கடும் சேவகர் பயந்திடவே
    • வல்லவர் இயேசு உயிர்த்தெழுந்தாரே
    • வல்ல பிதாவின் செயலிதுவே --- உயிர்

    • 2. மரித்தவர் மத்தியிலே
    • ஜீவ தேவனைத் தேடுவாரோ?
    • நீதியின் அதிபதி உயிர்த்தெழுந்தாரே
    • நித்திய நம்பிக்கை பெருகிடுதே --- உயிர்

    • 3. எம்மா ஊர் சீஷர்களின் 
    • எல்லா மன இருள் நீக்கினாரே
    • எம்மனக் கலக்கங்கள் நீங்கினதாலே
    • எல்லையில்லாப் பரமானந்தமே--- உயிர்

    • 4. மரணமுன் கூர் எங்கே?
    • பாதாள முன் ஜெய மெங்கே?
    • சாவையும் நோயையும் பேயையும் ஜெயித்தார்
    • சபையோரே துதி சாற்றிடுவோம்--- உயிர்

    • 5. ஆவியால் இன்றும் என்றும்
    • ஆ எம்மையும் உயிர்ப்பிக்கவே
    • ஆவியின் அச்சாரம் எனக்களித்தாரே
    • அல்லேலுயா துதி சாற்றிடுவோம்--- உயிர்

    • 6. பரிசுத்தமாகுதலை 
    • பயத்தோடென்றும் காத்துக்கொள்வோம்
    • எக்காளம் தொனிக்கையில் மறுரூபமாக
    • எழும்புவோமே மகிமையிலே--- உயிர்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 902 times