Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அன்பே ! அன்பே ! அன்பே !


    • அன்பே ! அன்பே ! அன்பே !
    • பல்லவி 
    • அன்பே ! அன்பே ! அன்பே !
    • ஆருயிர் உறவே
    • ஆனந்தம் ! ஆனந்தமே ! 

    • சரணங்கள்
    • 1. ஒருநாள் உம் தயை கண்டேனையா 
    • அந்நாளென்னை வெறுத்தேனையா 
    • உம்தயை பெரிதையா - என் மேல்
    • உம் தயை பெரிதையா --- அன்பே

    • 2. பரலோகத்தின் அருமைப் பொருளே , 
    • நரலோகரி லன்பேனையா ?
    • ஆழம் அறிவேனோ - அன்பின்
    • ஆழம் அறிவேனோ --- அன்பே

    • 3. அலைந்தேன் பலநாள் உமையுமறியா
    • மறந்தே திரிந்த துரோகியை
    • அணைத்தீர் அன்பாலே - எனையும்
    • அணைத்தீர் அன்பாலே --- அன்பே

    • 4. பூலோகத்தின் பொருளில் மகிமை
    • அழியும் புல்லின் பூவைப் போல
    • வாடாதே ஐயா - அன்பு
    • வாடாதே ஐயா --- அன்பே

    • 5. இப்பாரினில் உம் அன்பின் இனிமை
    • இயம்பற் கியலாதாகில் யான்
    • இசைக்கவும் எளிதாமோ - பரத்தில்
    • இசைக்கவும் எளிதாமொ --- அன்பே
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1224 times