Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அல்லேலூயா கர்த்தரையே


    • அல்லேலூயா கர்த்தரையே
    • 1. அல்லேலூயா கர்த்தரையே ஏகமாய்த் துதியுங்கள்
    • அவர் நடத்தும் செயல்களெல்லாம் பார்த்தோரே துதியுங்கள்
    • வல்லமையாய் கிரியை செய்யும் வல்லோரைத் துதியுங்கள் 
    • எல்லோரையும் ஏற்றுக்கொள்ளும் இயேசுவைத் துதியுங்கள் 

    • பல்லவி
    • இராஜாதி இராஜனாம் இயேசுராஜன் 
    • பூமியில் ஆட்சி செய்வார் 
    • அல்லேலுயா அல்லேலுயா
    • தேவனைத் துதியுங்கள் 

    • 2. தம்புரோடும், வீணையோடும் கர்த்தரைத் துதியுங்கள் 
    • இரத்தத்தினால் பாவங்களைப் போக்கினார் துதியுங்கள்
    • எக்காளமும் , கைத்தாளமும் முழங்கிடத் துதியுங்கள்
    • எக்காலமும் மாறாதவர் இயேசுவைத் துதியுங்கள்

    • 3. சூரியனே , சந்திரனே தேவனைத் துதியுங்கள்
    • ஒளியதனை எங்கள் உள்ளம் அளித்தோரைத் துதியுங்கள்
    • அக்கினியே , கல்மழையே படைத்தோரைத் துதியுங்கள் 
    • அக்கினியாய் கல்மனதை உடைப்போரைத் துதியுங்கள்

    • 4. பிள்ளைகளே , வாலிபரே தேவனைத் துதியுங்கள் 
    • வாழ்வதனை அவர் பணிக்கே கொடுத்து நீர் துதியுங்கள்
    • பெரியவரே , பிரபுக்களே தேவனைத் துதியுங்கள்
    • செல்வங்களை இயேசுவுக்காய் செலுத்தியே துதியுங்கள்

    • 5. ஆழ்கடலே சமுத்திரமே தேவனைத் துதியுங்கள் 
    • அலை அலையாய் ஊழியர்கள் எழும்பினார் துதியுங்கள்
    • தூதர்களே முன்னோடிகளே தேவனைத் துதியுங்கள்
    • பரலோகத்தை இந்தியர்கள் நிரப்புவார் துதியுங்கள்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 22772 times