Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

நிகரே இல்லாத சர்வேசா


    • நிகரே இல்லாத சர்வேசா
    • பல்லவி
    • நிகரே இல்லாத சர்வேசா
    • திகழும் ஒளி பிரகாசா 

    • அனுபல்லவி
    • துதிபாடிட இயேசு நாதா
    • பதினாயிரம் நாவுகள் போதா 

    • சரணங்கள்
    • 1. துங்கன் ஏசு மெய் பரிசுத்தரே
    • எங்கள் தேவனைத் தரிசிக்கவே
    • துதிகளுடன் கவிகளுடன்
    • தூய தூயனை நெருங்கிடுவோம் --- நிகரே

    • 2. கல்லும் மண்ணும் எம் கடவுளல்ல
    • கையின் சித்திரம் தெய்வமல்ல
    • ஆவியோடும் உண்மையோடும்
    • ஆதி தேவனை வணங்கிடுவோம் --- நிகரே

    • 3. பொன் பொருள்களும் அழிந்திடுமே
    • மண்ணும் மாயையும் மறைந்திடுமே
    • இதினும் விலை பெரும் பொருளே
    • இயேசு ஆண்டவர் திருவருளே --- நிகரே

    • 4. தேவ மைந்தனாய் அவதரித்தார்
    • பாவ சோதனை மடங்கடித்தார்
    • மனிதனுக்காய் உயிர் கொடுத்தார்
    • மாளும் மாந்தரை மீட்டெடுத்தார் --- நிகரே

    • 5. கொந்தளிக்கும் அலைகளையும்
    • கால் மிதிக்கும் கர்த்தரவர்
    • அடங்கிடுமே அதற்றிடவே
    • அக்கரை நாமும் சேர்ந்திடவே --- நிகரே

    • 6. ஜீவன் தந்தவர் மரித்தெழுந்தார்
    • ஜீவ தேவனே உயிர்த்தெழுந்தார்
    • மறுபடியும் வருவேனென்றார்
    • மாசந்தோஷ நாள் நெருங்கிடுதே --- நிகரே
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 230 times