Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தோத்திரம் துதி பாத்திரா


    • தோத்திரம் துதி பாத்திரா
    • பல்லவி
    • தோத்திரம் துதி பாத்திரா உம்மை
    • இன்றும் என்றும் துதித்திடுவேன் 

    • அனுபல்லவி
    • காத்தீரே என்னைக் கருத்தாக
    • வழுவாமல் என்னை உமக்காக
    • எடுத்தீர் எனையும் உமக்காக
    • கொடுத்தீர் உமையும் எனக்காக --- தோத்திரம் 

    • சரணங்கள்
    • 1. வல்ல வான ஞான விநோதா
    • துதியே துதியே துதித்திடுவேன்
    • எல்லாக் குறையும் தீர்த்தீரே
    • தொல்லை யாவும் தொலைத்தீரே
    • அல்லல் யாவும் அறுத்தீரே
    • அலையும் எனையும் மீட்டீரே --- தோத்திரம்

    • 2. நம்பினோரைக் காக்கும் தேவா
    • துதியே துதியே துதித்திடுவேன்
    • அம்புவியாவும் படைத்தீரே
    • அம்பரா உந்தன் வாக்காலே
    • எம்பரா எல்லாம் ஈந்தீரே
    • நம்பினோர்க் குந்தன் தயவாலே --- தோத்திரம்

    • 3. கண்ணின் மணிபோல் காத்தீரே எம்மைத்
    • துதியே துதியே துதித்திடுவேன்
    • அண்ணலே உந்தன் அருளாலே
    • அடியாரைக் கண் பார்த்தீரே
    • மன்னா எமக்கும் நீர் தாமே
    • எந்நாளும் எங்கள் துணை நீரே --- தோத்திரம்

    • 4. தீயோன் அம்புகள் தாக்காதே எம்மைத்
    • துதியே துதியே துதித்திடுவேன்
    • தேவா நீர் உந்தன் சிறகாலே
    • தினமும் மூடிக் காத்தீரே
    • தீதணு காதும் மறைவினிலே
    • தேடியுமதடி தங்கிடுவேன் --- தோத்திரம்

    • 5. அல்லேலூயா தோத்திரமே
    • துதியே துதியே துதித்திடுவேன்
    • அகில சிருஷ்டிகளும் துதிக்க
    • அடிமை துதியா திருப்பேனோ ?
    • அல்லும் பகலும் நித்தியமாய்
    • அன்பே உமையும் துதித்திடுவேன் --- தோத்திரம்
    • toilax 5mg toilax 01 toilax spc
      methotrexat grapefruit forstoppelseburp.site methotrexat 7 5
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 327 times