Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தொழுகிறோம் எங்கள் பிதாவே


    • தொழுகிறோம் எங்கள் பிதாவே 
    • பல்லவி
    • தொழுகிறோம் எங்கள் பிதாவே
    • பொழுதெல்லாம் ஆவி உண்மையுடனே 

    • அனுபல்லவி
    • பரிசுத்த அலங்காரத்துடனே
    • தரிசிப்பதினால் சரணம் சரணம் 

    • சரணங்கள்
    • 1. வெண்மையும் சிவப்புமானவர்
    • உண்மையே உருவாய்க் கொண்டவர்
    • என்னையே மீட்டுக் கொண்டவர்
    • அன்னையே இதோ சரணம் சரணம் --- தொழுகிறோம்

    • 2. தலை தங்க மயமானவர்
    • தலை மயிர் சுருள் சுருளானவர்
    • பதினாயிரம் பேரில் சிறந்தவர்
    • பதினாயிரமாம் சரணம் சரணம் --- தொழுகிறோம்

    • 3. கண்கள் புறாக்கண்கள் போல
    • கன்னங்கள் பாத்திகள் போல
    • சின்னங்கள் சிறந்ததாலே
    • எண்ணில்லாத சரணம் சரணம் --- தொழுகிறோம்

    • 4. கரங்கள் பொன் வளையல்கள் போல
    • நிறங்களும் தந்தத்தைப் போல
    • கால்களும் கல் தூண்கள் போல
    • காண்பதாலே சரணம் சரணம் --- தொழுகிறோம்

    • 5. சமஸ்த சபையின் சிரசே
    • நமஸ்காரம் எங்கள் அரசே
    • பிரதானம் எம் மூலைக்கல்லே
    • ஏராளமாய் சரணம் சரணம் --- தொழுகிறோம்

    • 6. அடியார்களின் அஸ்திபாரம்
    • அறிவுக்கெட்டாத விஸ்தாரம்
    • கூடி வந்த எம் அலங்காரம்
    • கோடா கோடியாம் சரணம் சரணம் --- தொழுகிறோம்

    • 7. பார்த்திபனே கன தோத்திரம்
    • கீர்த்தனம் மங்களம் நித்தியம்
    • வாழ்க வாழ்க வாழ்க என்றும்
    • அல்லேலூயா ஆமென் ஆமென் --- தொழுகிறோம்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1111 times