Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

துதிப்பேன் இயேசுவின் பாதம்


    • துதிப்பேன் இயேசுவின் பாதம்
    • 1. துதிப்பேன் இயேசுவின் பாதம் துதிக்கப் பெறுமற்புதரானதால்
    • வணங்குவேன் வணங்குவேன் வணங்குவேனவர் பாதம் வீழ்ந்து நான் --- துதி

    • 2. பேயின் தலை மிதித்தவர் நோயின் பெலனழித்தவர்
    • போற்றுவேன் போற்றுவேன் போற்றுவேனேசு தேவசுதனை --- துதி

    • 3. வானம் பூமியுமடங்க வல்ல அற்புதரானதால்
    • அற்புதர் , அற்புதர் , அற்புதர் , அவர் நாமமே அதைத் --- துதி

    • 4. ஜே! ஜே! ஜெயக்குமாரனும் ஜெயம்பெற்று விளங்கினார்
    • ஜொலிப்பாரே , ஜொலிப்பாரெ , ஜொலிப்பாரே அவர் தாசர் என்றைக்கும் --- துதி

    • 5. தூதர் கூட்டங்கள் போற்றும் தூய சுந்தரராமிவர்
    • மகத்துவமே , மகத்துவமே , மகத்துவமே அவர் ராஜ்யமென்றைக்கும் --- துதி

    • 6. செல்வேன் இயேசுவின் பாதம் சொல்வேன் உள்ளத்தின் பாரம்
    • மகிழுவேன் , மகிழுவேன் , மகிழுவேன், அவர் வார்த்தையிலென்றும் --- துதி

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 295 times