Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

துதித்துப் பாடிட பாத்திரமே


    • துதித்துப் பாடிட பாத்திரமே
    • 1. துதித்துப் பாடிட பாத்திரமே
    • துங்கவன் இயேசுவின் நாமமதே
    • துதிகளின் மத்தியில் வாசஞ்செய்யும்
    • தூயனை நேயமாய் ஸ்தோத்தரிப்போமே 

    • பல்லவி
    • ஆ! அற்புதமே அவர் நடத்துதலே
    • ஆனந்தமே பரமானந்தமே
    • நன்றியால் உள்ளமே மிக பொங்கிடுதே
    • நாம் அல்லேலூயா துதி சாற்றிடுவோம் 

    • 2. கடந்த நாட்களில் கண்மணிபோல்
    • கருத்துடன் நம்மைக் காத்தாரே
    • கர்த்தரையே நம்பி ஜீவித்திட
    • கிருபையும் ஈந்ததாலே ஸ்தோத்தரிப்போமே --- ஆ! அற்புதமே

    • 3. அக்கினி ஊடாய் நடந்தாலும்
    • ஆழியில் தண்ணீரைக் கடந்தாலும்
    • சோதனையோ மிகப் பெருகினாலும்
    • ஜெயம் நமக்கீந்ததால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே

    • 4. இந்த வனாந்திர யாத்திரையில்
    • இன்பராம் இயேசு நம்மோடிருப்பார்
    • போகையிலும் நம் வருகையிலும்
    • புகலிடம் ஆனதால் ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே

    • 5. வாஞ்சைகள் தீர்த்திட வந்திடுவார்
    • வாரும் என்றே நாம் அழைத்திடுவோம்
    • வானத்திலே ஒன்று சேர்ந்திடும் நாள்
    • விரைந்து நெருங்கிட ஸ்தோத்தரிப்போமே --- ஆ!அற்புதமே

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 245 times