Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சத்தாய் நிஷ்களமாய்


    • சத்தாய் நிஷ்களமாய் 
    • 1. சத்தாய் நிஷ்களமாயொரு சாமிய மும்மில தாய்ச்
    • சித்தாயானந்தமாய்த் திகழ்கின்ற திரித்துவமே
    • எத்தால் நாயடியேன் , கடைத்தேறுவனென் பாவந்தீர்ந்து
    • அத்தாவுன்னை யல்லா லெனக்கார் துணை யாருறவே?

    • 2. எம்மாவிக்குருகி உயிரீந்து புரந்த தற்கோர்
    • கைமாறுண்டு கொலோ? கடைகாறும் கையடையாய்
    • சும்மா ரஷணை செய் சொல் சுதந்தரம் யாதுமிலேன்
    • அம்மானுன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

    • 3. ஈண்டே யென்னுள்ளத்தில் விசுவாச விளக்கிலங்கத்
    • தூண்டா யென்னிலந்தோ மயல் சூழ்ந்து கெடுத்திடுங்காண்
    • மாண்டா யெம் பிழைக்காய் உயிர்த்தாயெமை வாழ்விக்கவே
    • ஆண்டா யுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே?

    • 4. மையார் கண்ணிருண்டு செவி வாயடைத்துக் குழறி
    • ஐயால் மூச்சொடுங்கி உயிராக்கை விட்டே கிடும்நாள்
    • நையேல் கை வெகிவேனுனை நாணுண் பஞ்சலென
    • ஐயா உன்னையல்லா லெனக்கார் துணை யாருறவே?

    • 5. திரைசேர் வெம்பவமாங் கடல் மூழ்கிய தீயரெமைக்
    • கரை சேர்த்துய்க்க வென்றே புணையாயினை கண்ணிலியான்
    • பரசேன் பற்றுகிலேனெனைப் பற்றிய பற்றுவிடாய்
    • அரசேயுன்னை யல்லாலெனக்கார் துணை யாருறவே

    • 6. தாயே தந்தை தமர் , குரு சம்பத்து நட்பெவையும்
    • நீயே எம் பெருமான் கதிவேறிலை நிண்ணயங்காண் ,
    • ஏயே வென்றி கழுமுலகோடெனக் கென்னுரிமை
    • ஆயேவுன்னை அல்லாலெனக் கார் துணை யாருறவே?
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 182 times