Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சுய அதிகாரா சுந்தரக் குமாரா


    • சுய அதிகாரா சுந்தரக் குமாரா
    • பல்லவி 
    • சுய அதிகாரா சுந்தரக் குமாரா
    • சொந்த உலகந்தனை துறந்த மரிமைந்தனான --- சுய 

    • சரணங்கள்
    • 1. அகிலத்தை ஒரு சொல்லில் அமைத்தனையே
    • அதை ஒரு பம்பரம் போலிசைத்தனையே
    • துகில் போல் ஆகாயமதை லகுவாய் சமைத்ததிலே
    • ஜோதி பல மாதிரியாய்த் தூக்கி வைத்தி லங்கவைத்த --- சுய

    • 2. கரை மத கற்றகுளம் புவியிலுண்டோ
    • கடலுக்கவன் சொல்லையன்றிக் கரைகளுண்டோ
    • திரை திரையாக ஜலம் மலைபோற் குவிழ்ந்தெழுந்தும்
    • சேதமின்றிப் பூதலத்தை மா தயவாய் பாதுகாக்கும் --- சுய

    • 3. நரர் பலர் கூடி ஒரு மனை முடிக்க
    • இராப்பகலுழைத்திட்டாலும் நாள் பிடிக்குமே
    • மர முயிர் தாது இன்னும் வான் புவி யனைத்தையும் ஓர்
    • வார்த்தையால் ஷணப் பொழுதில் நேர்த்தியாய் உண்டாக்கி வைத்த --- சுய

    • 4. பாவ மனுவோர் முகத்தைப் பார்த்தீரே
    • பாவப்பிணி தோள் சுமந்து தீர்த்தீரே
    • சுவாமி உம்மைப் பற்றும் சுவாமி தாசருக் கிரங்க வேண்டும்
    • தஞ்சம் தஞ்சம் ஓடி வந்தோம் கெஞ்சமனுக் கேட்டருள்வாய் --- சுய
  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 171 times