Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

காலையும் மாலையும்


    • காலையும் மாலையும் 
    • பல்லவி
    • காலையும் மாலையும் எவ்வேளையும் கர்த்தரைக்
    • கருத்துடன் பாடிடுவேன் 

    • அனுபல்லவி
    • பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தர் எனத்தூதர்
    • பாடிடும் தொனி கேட்குதே 

    • சரணங்கள்
    • 1. கர்த்தர் என் வெளிச்சம் ஜீவனின் பெலனும்
    • கிருபையாய் இரட்சிப்புமானார்
    • அஞ்சிடாமல் கலங்காமல் பயமின்றித் திகிலின்றி
    • அனுதினம் வாழ்ந்திடுவேன் --- காலையும்

    • 2. எனக்கெதிராய் ஓர் பாளையமிறங்கி
    • என்மேல் ஓர் யுத்தம் வந்தாலும்
    • பயப்படேன்; எதிராளி நிமித்தமாய் செவ்வையான
    • பாதையில் நடத்திடுவார் --- காலையும்

    • 3. ஒன்றை நான் கேட்டேன் , அதையே நாடுவேன்
    • என்றும் தம் மகிமையைக் காண
    • ஜீவனுள்ள நாளெல்லாம் தம் ஆலயத்தில் தங்குவதை
    • வாஞ்சித்து நாடிடுவேன் --- காலையும்

    • 4. தீங்கு நாளில் தம் கூடார மறைவில்
    • தேடிச் சேர்த்தென்னை மறைப்பார்
    • உன்னதத்தில் மறைவாக ஒளித்தென்னைப் பாதுகாத்து
    • உயர்த்துவார் கன்மலைமேல் --- காலையும்

    • 5. எந்தன் முகத்தைத் தேடுங்கள் என்று
    • என் கர்த்தர் சொன்னதினாலே
    • தம் முகத்தைத் தேடுவேனே கூப்பிடும் என் சத்தம் கேட்டு
    • தயவாகப் பதிலளிப்பார் --- காலையும்

    • 6. தகப்பனும் தாயும் கைவிட்டாலும் என்
    • கர்த்தர் என்னைச் சேர்த்துக்கொள்வார்
    • எந்தன் உள்ளம் ஸ்திரமாகத் திடமாகக் கர்த்தருக்கே
    • என்றென்றும் காத்திருக்கும் --- காலையும்

    • 7. எனக்காக யாவும் செய்து முடிப்பார்
    • என் கர்த்தர் வாக்கு மாறிடார்
    • தமக்கென்றும் பயந்திடும் பக்தர் யாவர் விருப்பமும்
    • தவறாமல் நிறைவேற்றுவார் --- காலையும்

  • Album: துதிப் பாடல்கள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 188 times