Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

துதி தங்கிய பரமண்ட


    • துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம் 
    • பல்லவி
    • துதி தங்கிய பரமண்டல சுவிசேடக நாமம்,
    • சுப மங்கள மிகு சம்பிரம சுக சோபன ஷேமம்! 

    • சரணங்கள்
    • 1. அதி சுந்தர நிறை கொண்டுயர் அருள் மோக்கிஷ தீபன்,
    • கதி உம்பர்கள் தொழும் இங்கித கருணைப் பிரதாபன் --- துதி

    • 2. மந்தை ஆயர் பணிந்து பாதம் மகிழ்ந்து வாழ்த்திய அத்தனார்,
    • நிந்தையாய் ஒரு கந்தை மூடவும் வந்த மாபரி சுத்தனார் --- துதி

    • 3. திருவான் உல கரசாய் வளர் தேவ சொரூபனார்,
    • ஒரு மாதுடை வினை மாறிட நரர் ரூபமதானார் --- துதி

    • 4. ஆபிராம் முனி யிடமேவிய பதிலாள் உபகாரன்,
    • எபிரேயர்கள் குலம் தாவீதென் அரசற் கோர்குமாரன் --- துதி

    • 5. சாதா ரண வேதா கம சாஸ்த்ர சுவிசேஷன்,
    • கோதே புரி ஆதா முடை கோத்ர திரு வேஷன் --- துதி

    • 6. விண்ணாடரும் மண்ணாடரும் மேவுந் திருப் பாதன்,
    • பண்ணோதுவர் கண்ணாம் வளர் பர மண்டல நாதன் --- துதி

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 318 times