Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஜெப சிந்தை எனில் தாரும்


    • ஜெப சிந்தை எனில் தாரும்
    • பல்லவி
    • ஜெப சிந்தை எனில் தாரும், தேவா - என்னை 

    • அனுபல்லவி
    • அபயமென் றுனக் குக்கை
    • அளித்தேன் பொற்பாதா --- ஜெப 

    • சரணங்கள்
    • 1. உண்மை மனதோ டுன்னைக் கெஞ்ச - உல
    • கெண்ண மெல்லாம் அகற்றி உரிமையே மிஞ்ச,
    • தொன்மை ஆயக்காரன் போலஞ்ச - பவ 
    • தோஷமகலத் திருரத்தம் உள்ளிஞ்ச --- ஜெப 

    • 2. இடைவிடாமல் செய்யும் எண்ணம் - என் 
    • இதயத்தில் உதயமாய் இலங்கிடப் பண்ணும்,
    • சடமுலகப் பேயை வெல்லும் - நற் 
    • சாதக முண்டாகத் தயைசெய் என்னுள்ளம் --- ஜெப

    • 3. ஊக்கமுடன் ஜெபம் செய்ய - தகா 
    • நோக்க மெல்லாம் கெட்டு நொறுங்கியே நைய,
    • பேய்க்கண மோடுபோர் செய்ய - நல்
    • ஆக்கம் எனில் தந்து ஏக்கம் தீர்ந்துய்ய --- ஜெப

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 232 times