Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஜகநாதா, குருபரநாதா


    • ஜகநாதா, குருபரநாதா
    • பல்லவி
    • ஜகநாதா, குருபரநாதா, திரு
    • அருள் நாதா, ஏசுபிரசாதா நாதா! 

    • அனுபல்லவி
    • திகழுறுந் தாதா, புகழுறும் பாதா,
    • தீதறும் வேத போதா! --- ஜகநாதா 

    • சரணங்கள்
    • 1. முற்காலம் ஆதிமைந்தர் மோசப் பிசாசு தந்திர
    • மொய் கொண்டு கனியுண்ட பழியாலோ?
    • நற்காலம் நீ தெரிந்து, நவின்ற வண்ணம் பரிந்து,
    • நரதேவனாக வந்தாய் மொழியாலோ? --- ஜகநாதா

    • 2. எளிய கோலம் தரித்தே இங் கவதிரித்தாலும்,
    • இமையோர் வந்திறைஞ்சிடத் தெரிந்தாயே,
    • ஒளி செய்யும் பணிமுடி உயர் மன்னர் தொழும்படி
    • உடு வழி காட்டிடப் புரிந்தாயே --- ஜகநாதா

    • 3. அருந் தவன் கையில் தங்கி, அன்பின்பக் கடல் பொங்கி,
    • ஆலயத்தில் துதிக்க களித்தாயே,
    • வரும் தவ மதியால் முன் மற மன்னன் தேடிட, உன்
    • மலர் முகங் காட்டாமல் ஒளித்தாயே --- ஜகநாதா

    • 4. மக்கள் உளக் களங்கம் மாசற்றொளி விளங்க,
    • மதுரபரசங்கம் யார்க்கும் உரைத்தாயே;
    • சிக் கடர் துன் மனத்தைத் திருத்தி, அறத்தின் வித்தை
    • திருத் தயை கூர்ந் தெவர்க்கும் விதைத்தாயே --- ஜகநாதா

    • 5. தனையர் வல் நோயைக்கண்ட தாயார் மருந்துட் கொண்ட
    • தகைமை எனப் பேரன்பு கூர்ந்தாயே;
    • வினையர் வெம் பாவக் கேடு விலக அரிய பாடு
    • மேவி அனுபவிக்க நேர்ந்தாயே --- ஜகநாதா

    • 6. அமரர் முற்றும் அறியார், அடிகள் சற்றும் அறியார்,
    • ஆர் உன் திறல் அறிவார், கர்த்தாவே?
    • எமது பவம் பொறுத்தே, இரக்கம் எம்மேல் உகுத்தே,
    • எமைப் புரந்தாளும், மானப் பர்த்தாவே --- ஜகநாதா
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 304 times