Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சொல்லரும் மெய்ஞ்ஞானரே


    • சொல்லரும் மெய்ஞ்ஞானரே
    • பல்லவி
    • சொல்லரும் மெய்ஞ்ஞானரே, மேன்மைப்ரபுவே,
    • சுரூபத் தரூபக் கோனாரே - உரை 

    • அனுபல்லவி
    • வல்லறஞ் சிறந்து மனுவானாரே - உயர்
    • இல்லறந் துறந்து குடிலானாரே - உரை --- சொல் 

    • சரணங்கள்
    • 1. மாடாயர் தேடும் வஸ்துபகாரி - மிகு
    • கேடாளர் நாடுங் கிறிஸ்து சற்காரி,
    • வையகம் புரப்பதற்கு வந்தாரே - அருள்
    • பெய்து நவமும் தவமுந் தந்தாரே - உரை --- சொல்

    • 2. அச்சய சவுந்தர அசரீரி - அதி
    • உச்சித சுதந்தர அருள்வாரி,
    • ஐயா வல்லாவே, மாதேவா - ஓ!
    • துய்யா, நல்லாவே, ஏகோவா - உரை --- சொல்

    • 3. பாவ வினை யாவையுந் தீர்த்தாரே - உயர்
    • தேவ சபையில் எமைச் சேர்த்தாரே
    • செல்லமாய் முகம் பார்த்தாரே - பெரும்
    • செல்வம் போல் எமைச் சேர்த்தாரே - உரை --- சொல்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 332 times