Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சீர்மிகு வான்புவி தேவா


    • சீர்மிகு வான்புவி தேவா
    • 1. சீர்மிகு வான்புவி தேவா, தோத்ரம்,
    • சிருஷ்டிப்பு யாவையும் படைத்தாய், தோத்ரம்,
    • ஏர்குணனே தோத்ரம், அடியர்க்-கு
    • இரங்கிடுவாய், தோத்ரம், மா நேசா

    • 2. நேர் மிகு அருள் திரு அன்பா, தோத்ரம்,
    • நித்தமு முமக் கடியார்களின் தோத்ரம்,
    • ஆர் மணனே, தோத்ரம், உனது
    • அன்பினுக்கே தோத்ரம், மா நேசா

    • 3. ஜீவன், சுகம், பெலன், யாவுக்கும் தோத்ரம்,
    • தினம் தினம் அருள் நன்மைக்காகவும் தோத்ரம்,
    • ஆவலுடன் தோத்ரம், உனது
    • அன்பினுக்கே தோத்ரம், மா நேசா

    • 4. ஆத்தும நன்மைகட்காகவும் தோத்ரம்,
    • அதிசய நடத்துதற்காகவும் தோத்ரம்,
    • சாற்றுகிறோம் தோத்ரம், உனது
    • தகுமன்புக்கே தோத்ரம், மா நேசா

    • 5. மாறாப் பூரண நேசா, தோத்ரம்,
    • மகிழொடு ஜெபமொழி மாலையின் தோத்ரம்,
    • தாராய் துணை, தோத்ரம், இந்தத்
    • தருணமே கொடு, தோத்ரம், மா நேசா

    • rigevidon reddit rigevidon tabletki rigevidon quantity
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 721 times