Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சத்திய வேதத்தைத்


    • சத்திய வேதத்தைத் தினம் தியானி
    • பல்லவி
    • சத்திய வேதத்தைத் தினம் தியானி
    • சகல பேர்க்கும் அதபிமானி 

    • அனுபல்லவி
    • உத்தமஜீவிய வழிகாட்டும்
    • உயர்வானுலகில் உனைக்கூட்டும் --- சத்திய 

    • சரணங்கள்
    • 1. வாலிபர்தமக்கூண் அதுவாகும்
    • வயோதியர்க்கும் அதுணவாகும்
    • பாலகர்க்கினிய பாலும் அதாம்
    • படிமீ தாத்மபசி தணிக்கும் --- சத்திய

    • 2. சத்துருப் பேயுடன் அமர்புரியும்
    • தருணம் அதுநல் ஆயுதமாம்
    • புத்திரர் மித்திரரோடு மகிழும் 
    • பொழுதும் அதுநல் உறவாகும் --- சத்திய

    • 3. புலைமேவிய மானிட ரிதயம்
    • புனிதம் பெறுதற்கதுமருந்தாம்
    • நிலையா நரர்வாணாள் நிலைக்க 
    • நேயகாய கற்பம் அதாம் --- சத்திய

    • 4. கதியின் வழிகாணாதவர்கள்
    • கண்ணுக்கரிய கலிக்கம் அது
    • புதிய எருசாலேம்பதிக்குப் போகும்
    • பயணத்துணையும் அது --- சத்திய
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 277 times