Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

குருசினில் தொங்கியே


    • குருசினில் தொங்கியே
    • பல்லவி
    • குருசினில் தொங்கியே குருதியும் வடிய
    • கொல்கதா மலைதனிலே - நம்
    • குருவேசு சுவாமி கொடுந் துயர் பாவி,
    • கொள்ளாய் கண் கொண்டு 

    • சரணங்கள்
    • 1. சிரசினில் முண்முடி உறுத்திட, அறைந்தே
    • சிலுவையில் சேர்த்தையோ! - தீயர்
    • திருக்கரங் கால்களில் ஆணிகளடித்தார்,
    • சேனைத்திரள் சூழ --- குருசினில்

    • 2. பாதகர் நடுவில் பாவியினேசன்
    • பாதகன் போல் தொங்க - யூத
    • பாதகர் பரிகாசங்கள் பண்ணிப்
    • படுத்திய கொடுமைதனை --- குருசினில்

    • 3. சந்திர சூரிய சசல வான் சேனைகள்
    • சகியாமல், நாணுதையோ! - தேவ
    • சுந்தர மைந்த னுயிர் விடுகாட்சியால்
    • துடிக்கா நெஞ்சுண்டோ? -- குருசினில்

    • 4. ஈட்டியால் சேவகன் எட்டியே குத்த
    • இறைவன் விலாவதிலே - அவர் 
    • தீட்டிய திட்சைக் குருதியும் ஜலமும்
    • திறந்தூறோடுது பார் --- குருசினில்

    • 5. எருசலேம் மாதே, மறுகி நீயழுது 
    • ஏங்கிப் புலம்பலையோ? - நின்
    • எருசலையதிபன் இள மணவாளன்
    • எடுத்த கோல மிதோ? --- குருசினில்
    • rigevidon reddit rigevidon risks rigevidon quantity
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 910 times