Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கிறிஸ்தவ இல்லறமே


    • கிறிஸ்தவ இல்லறமே
    • பல்லவி
    • கிறிஸ்தவ இல்லறமே - சிறந்திடக்
    • கிருபை செய்வீர், பரனே! 

    • அனுபல்லவி
    • பரிசுத்த மரியன்னை, பாலன் யேசு, யோசேப்புப்
    • பண்பாய் நடத்திவந்த இன்பக்குடும்பம்போல --- கிறிஸ்தவ 

    • சரணங்கள்
    • 1. ஜெபமென்னும் தூபமே தினம் வானம் ஏறவும்,
    • திருவேத வாக்கியம் செவிகளில் கேட்கவும்,
    • சுப ஞானக்கீர்த்தனை துத்தியம் பாடவும்,
    • சுத னேசு தலைமையில் தூய வீடாகவும் --- கிறிஸ்தவ

    • 2. ஊழியம் புரியவும் ஊதியம் விரும்பாமல்,
    • உவந்த பெத்தானியா ஊரின் குடும்பம்போல,
    • நாளும் யேசு பிரானை நல்விருந்தாளி யாக்கி,
    • நாடியவர் பாதத்தில் கூடியமர்ந்து கேட்டுக் --- கிறிஸ்தவ

    • 3. அன்போடாத்தும தாகம் அரிய பரோபகாரம்,
    • அருமையாக நிறைந்த அயலார்க் கொளிவிளக்காய்த்,
    • துன்பஞ் செய்கிற பலதொத்து வியாதிகளைத்,
    • தூரந்துரத்தும் வகை சொல்லிச் சேவையைச் செய்து --- கிறிஸ்தவ

    • 4. மலையதின் மேலுள்ள மாளிகையைப் போலவே,
    • மற்றவர்களுக்கு முன் மாதிரியாய் நின்று,
    • கலைஉடை உணவிலும், கல்வி முயற்சியிலும்,
    • கர்த்தருக் கேற்ற பரிசுத்தக் குடும்பமாகக் --- கிறிஸ்தவ
    • toilax 5mg bhalsbrand.site toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 708 times