Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தேவ பிதா என்றன்


    • தேவ பிதா என்றன் மேய்ப்பன்
    • பல்லவி
    • தேவ பிதா என்றன் மேய்ப்பன் அல்லோ, 
    • சிறுமை தாழ்ச்சி அடைகிலனே 

    • அனுபல்லவி
    • ஆவலதாய் எனைப் பைம்புன்மேல் 
    • அவர் மேய்த் தமர் நீர் அருளுகின்றார் --- தேவ 

    • சரணங்கள்
    • 1. ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி 
    • அடியேன் கால்களை நீதி என்னும் 
    • நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம் 
    • நிதமும் சுகமாய் நடத்துகின்றார் --- தேவ 

    • 2. சா நிழல்பள்ளத் திறங்கிடினும், 
    • சற்றும் தீங்கு கண்டஞ்சேனே 
    • வானபரன் என் னோடிருப்பார் 
    • வளை தடியும் கோலுமே தேற்றும் --- தேவ 

    • 3. பகைவர்க் கெதிரே ஒரு பந்தி 
    • பாங்காய் எனக்கென் றேற்படுத்திச் 
    • சுக தயிலம் கொண்டென் தலையைச் 
    • சுபமாய் அபிஷேகம் செய்குவார் --- தேவ 

    • 4. ஆயுள் முழுவதும் என் பாத்ரம் 
    • அருளும் நலமுமாய் நிரம்பும், 
    • நேயன் வீட்டினில் சிறப்போடே 
    • நெடுநாள் குடியாய் நிலைத்திருப்பேன் --- தேவ 

    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 177 times