Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தோத்திரம்


    • தோத்திரம் செய்வேனே
    • பல்லவி
    • தோத்திரம் செய்வேனே - ரட்சகனைத்
    • தோத்திரம் செய்வேனே 

    • அனுபல்லவி
    • பாத்திரமாக்க இம்மாத்ரம் கருணைவைத்த
    • பார்த்திபனை யூதக் கோத்திரனை, என்றும் --- தோத்திரம் 

    • சரணங்கள்
    • 1. அன்னை மரி சுதனை - புல்மீது
    • அமிழ்துக் கழுதவனை,
    • முன்னணை மீதுற்ற சின்னக் குமாரனை,
    • முன்னுரை நூற்படி இந்நிலத் துற்றோனை --- தோத்திரம்

    • 2. கந்தை பொதிந்தவனை - வானோர்களும்
    • வந்தடி பணிபவனை,
    • மந்தையர்க் கானந்த மாட்சியயளித்தோனை,
    • வான பரன் என்னும் ஞான குணவானை --- தோத்திரம்

    • 3. செம்பொன் னுருவானைத் - தேசிகர்கள் 
    • தேடும் குருவானை,
    • அம்பர மேவிய உம்பர் கணத்தோடு 
    • அன்பு பெற நின்று, பைம் பொன் மலர் தூவி --- தோத்திரம்

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 166 times