Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தேவனே


    • தேவனே, நான் உமதண்டையில்
    • பல்லவி
    • தேவனே, நான் உமதண்டையில் - இன்னும் நெருங்கிச்
    • சேர்வதே என் ஆவல் பூமியில். 

    • அனுபல்லவி
    • மாவலிய கோரமாக வன்சிலுவை மீதினில் நான்
    • கோவே தொங்க நேரிடினும் ஆவலாய் உம்மண்டை சேர்வேன் --- தேவனே 

    • சரணங்கள்
    • 1. யாக்கோபைப்போல், போகும் பாதையில் - பொழுது பட்டு
    • இராவில் இருள் வந்து மூடிட,
    • தூக்கத்தால் நான் கல்லில் சாய்ந்து தூங்கினாலும் என் கனாவில்
    • நோக்கியும்மைக் கிட்டிச் சேர்வேன், வாக்கடங்கா நல்ல நாதா! --- தேவனே

    • 2. பரத்துக்கேறும் படிகள் போலவே - என் பாதை தோன்றப்
    • பண்ணும் ஐயா, என்றன் தேவனே,
    • கிருபையாக நீர் எனக்குத்தருவதெல்லாம் உமதண்டை
    • அருமையாய் என்னையழைத்து அன்பின் தூதனாகச் செய்யும் --- தேவனே

    • 3. நித்திரையினின்று விழித்துக் - காலை எழுந்து
    • கர்த்தாவே, நான் உம்மைப் போற்றுவேன்;
    • இத்தரையில் உந்தன் வீடாய் என்துயர்க் கல் நாட்டுவேனே,
    • என்றன் துன்பத்தின் வழியாய் இன்னும் உம்மைக் கிட்டிச் சேர்வேன் --- தேவனே

    • 4. ஆனந்தமாம் செட்டை விரித்துப் - பரவசமாய்
    • ஆகாயத்தில் ஏறிப் போயினும்,
    • வான மண்டலங் கடந்து பறந்து மேலே சென்றிடினும்
    • மகிழ்வுறு காலத்திலும் நான் மருவியும்மைக் கிட்டிச் சேர்வேன் --- தேவனே
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 178 times