Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தாசரே இத்தரணியை


    • தாசரே இத்தரணியை அன்பாய் 
    • பல்லவி
    • தாசரே இத்தரணியை அன்பாய்
    • இயேசுவுக்கு சொந்தமாக்குவோம் 

    • அனுபல்லவி
    • நேசமாய் இயேசுவைக் கூறுவோம், அவரைக்
    • காண்பிப்போம், மாவிருள் நீக்குவோம்,
    • வெளிச்சம் வீசுவோம் 

    • சரணங்கள்
    • 1. வருத்தப்பட்டுப் பாரஞ்சுமப்போரை
    • வருந்தியன்பாய் அழைத்திடுவோம் 
    • உரித்தாய் இயேசு பாவப்பாரத்தை 
    • நமது துக்கத்தை நமது துன்பத்தைச் சுமந்து தீர்த்தாரே --- தாசரே

    • 2. பசியுற்றோர்க்குப் பிணியாளிகட்குப்
    • பட்சமாக உதவி செய்வோம் 
    • உசித நன்மைகள் நிறைந்து தமை மறந்து
    • இயேசு கனிந்து திரிந்தனரே --- தாசரே

    • 3. நெருக்கப்பட்டு ஒடுக்கப்பட்டோரை 
    • நீசரை நாம் உயர்த்திடுவோம் 
    • பொறுக்க வொண்ணா கஷ்டத்துக்குள்
    • நிஷ்டூரத்துக்குள், படுகுழிக்குள் விழுந்தனரே --- தாசரே 

    • 4. இந்து தேச மாது சிரோமணிகளை 
    • விந்தை யொளிக்குள் வரவழைப்போம் 
    • சுந்தர குணங்களடைந்து அறிவிலுயர்ந்து 
    • நிர்பந்தங்கள் தீர்ந்து சிறந்திலங்கிட --- தாசரே

    • 5. மார்க்கம் தப்பி நடப்போரைச் சத்ய 
    • வழிக்குள் வந்திடச் சேர்த்திடுவோம் 
    • ஊக்கமாக ஜெபித்திடுவோம் நாமுயன்றிடுவோம்
    • நாம் உழைத்திடுவோம், நாம் ஜெயித்திடுவோம் --- தாசரே
    • methotrexat grapefruit methotrexat folsyre methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 212 times