Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சுந்தரப் பரம


    • சுந்தரப் பரம தேவ மைந்தன்
    • பல்லவி
    • சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசு கிறிஸ்துவுக்குத்
    • தோத்திரம், புகழ்ச்சி நித்ய கீர்த்தனம் என்றும் ! 

    • அனுபல்லவி
    • அந்தரம் புவியும் தந்து , சொந்த ஜீவனையும் ஈந்து
    • ஆற்றினார், நமை ஒன்றாய் கூட்டினார், அருள் முடி
    • சூட்டினார், கிருபையால் தேற்றினாரே, துதி --- சுந்தர 

    • சரணங்கள்
    • 1. பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
    • பாவிகளான நமை உசாவி மீட்டாரே;
    • வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்ட வந்த
    • மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே, 
    • கோதணுகா நீதிபரன் பாதமதின் ஆதரவில் 
    • கூடுங்கள் - பவத்துயர் 
    • போடுங்கள் - ஜெயத்தைக் கொண்
    • டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும் --- சுந்தர

    • 2. விண்ணிலுள்ள ஜோதிகளும் எண்ணடங்காச் சேனைகளும்
    • விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே ,
    • மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
    • வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே, 
    • அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக் கொண்
    • டாடிட - அவர் பதம் 
    • தேடிட - வெகு திரள் 
    • கூடிடத் துதிபுகழ் பாடிடப் பாடிட என்றும் --- சுந்தர

    • 3. சத்தியத் தலைவர்களும் வித்தகப் பெரியார்களும் 
    • சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே, 
    • எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும் 
    • ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே, 
    • உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,
    • உயர்ந்து - வாழ, தீயோன் 
    • பயந்து - தாழ, மிக 
    • நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும் --- சுந்தர
    • toilax 5mg toilax 01 toilax spc
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 258 times