Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

சீர் ஏசு நாதனுக்கு


    • சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்
    • பல்லவி
    • சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம் - ஆதி
    • திரி யேக நாதனுக்கு சுபமங்களம் 

    • அனுபல்லவி
    • பாரேறு நீதனுக்கு , பரம பொற்பாதனுக்கு ,
    • நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு --- சீர் 

    • சரணங்கள்
    • 1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்
    • அகிலப் பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்
    • நீதி பரன் பாலனுக்கு , நித்திய குணாலனுக்கு,
    • ஓதும் அனுகூலனுக்கு , உயர் மனுவேலனுக்கு --- சீர்

    • 2. மானாபி மானனுக்கு , வானனுக்கு மங்களம்
    • வளர் கலைக் கியானனுக்கு , ஞானனுக்கு மங்களம்
    • கானான் நல் தேயனுக்குக் கன்னிமரிசேயனுக்கு,
    • கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு --- சீர் 

    • 3. பத்து லட்ச ணத்தனுக்குச் சுத்தனுக்கு மங்களம்
    • பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம் 
    • சத்திய விஸ்தாரனுக்குச் சருவாதி காரனுக்கு,
    • பத்தர் உப காரனுக்குப் பரம குமாரனுக்கு --- சீர் 

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 334 times