Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கர்த்தரின் பந்தியில் வா


    • கர்த்தரின் பந்தியில் வா
    • பல்லவி
    • கர்த்தரின் பந்தியில் வா - சகோதரா
    • கர்த்தரின் பந்தியில் வா 

    • அனுபல்லவி
    • கர்த்தர் அன்பாய்ச் சொந்த ரத்தத்தைச் சிந்தின 
    • காரணத்தை மனப் பூரணமாய் எண்ணி --- கர்த்தரின் 

    • சரணங்கள்
    • 1. ஜீவ அப்பம் அல்லோ? - கிறிஸ்துவின்
    • திருச் சரீரம் அல்லோ? 
    • பாவ மனங் கல்லோ? - உனக்காய்ப்
    • பகிரப்பட்ட தல்லோ? 
    • தேவ குமாரனாம் ஜீவ அப்பத்தை நீ 
    • தின்று அவருடன் என்றும் பிழைத்திட --- கர்த்தரின்

    • 2. தேவ அன்பைப் பாரு - கிறிஸ்துவின்
    • சீஷர் குறை தீரு 
    • பாவக் கேட்டைக் கூறு - ராப்போசன
    • பந்திதனில் சேரு 
    • சாவுக்குரிய மா பாவமுள்ள லோகம்
    • தன்னில் மனம் வைத்து அன்னியன் ஆகாதே --- கர்த்தரின்

    • 3. அன்பின் விருந்தாமே - கர்த்தருடன்
    • ஐக்யப் பந்தியாமே 
    • துன்பம் துயர் போமே - இருதயம்
    • சுத்த திடனாமே
    • இன்பம் மிகும் தேவ அன்பின் விருந்துக்கு 
    • ஏது தாமதமும் இல்லாதிப்போதே வா --- கர்த்தரின்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 322 times