Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கண்டேனென் கண்குளிர


    • கண்டேனென் கண்குளிர
    • பல்லவி
    • கண்டேனென் கண்குளிர - கர்த்தனை யின்று

    • அனுபல்லவி
    • கொண்டாடும் விண்ணோர்கள் கோமானைக் கையிலேந்திக் --- கண்

    • சரணங்கள்
    • 1. பெத்தலேம் - சத்திர முன்னணையில்
    • உற்றோருக் - குயிர்தரும் உண்மையாம் என் ரட்சகனைக் --- கண்

    • 2. தேவாதி - தேவனை, தேவசேனை
    • ஓயாது - தோத்தரிக்கும் ஒப்புநிகர் அற்றவனைக் --- கண்

    • 3. பாவேந்தர் - தேடிவரும் பக்தர் பரனை,
    • ஆரேந்தர் - அடிதொழும் அன்பனை, என் இன்பனைநான் --- கண்

    • 4. முத்தொழிற் - கர்த்தாவாம் முன்னவனை,
    • இத்தரை - மீட்க எனை நத்தி வந்த மன்னவனைக் --- கண்

    • 5. மண்ணோர் - இருள்போக்கும் மாமணியை,
    • விண்ணோரும் - வேண்டி நிற்கும் விண்மணியைக், கண்மணியைக் --- கண்

    • 6. அண்டி னோர்க் - கன்புருவாம் ஆரணனை,
    • கண்டோர்கள் - கலிதீர்க்கும் காரணனை, பூரணனைக் --- கண்

    • 7. அன்னையாம் - கன்னியும் ஐயனுடன்
    • முன்னறி - யாப்பசுவின் புல்லணையில் உன்னழகைக் --- கண்

    • methotrexat grapefruit methotrexat 30 mg methotrexat 7 5
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 264 times