Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

கும்பிடுகிறேன் நான்


    • கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன்
    • பல்லவி
    • கும்பிடுகிறேன் நான் கும்பிடுகிறேன் - எங்கள் 
    • குருவேசுநாதர் பதங் கும்பிடுகிறேன் 

    • சரணங்கள்
    • 1. அம்புவி படைத்தவனைக் கும்பிடுகிறேன் - எனை 
    • ஆண்டவனை, மீண்டவனைக் கும்பிடுகிறேன்
    • நம்புமடி யார்க்கருளைக் கும்பிடுகிறேன் - பவ 
    • நாசனைக் க்ருபாசனைக் கும்பிடுகிறேன் 
    • தம்பமெனக் கானவனைக் கும்பிடுகிறேன் - நித்திய
    • சருவ தயாபரனைக் கும்பிடுகிறேன்
    • உம்பர் தொழும் வஸ்துவையே கும்பிடுகிறேன் - தொனித்
    • தோசன்னா வோசன்னாவென்று கும்பிடுகிறேன் --- கும்பிடு 

    • 2. ஒரு சருவேசுரனைக் கும்பிடுகிறேன் - ஒன்றும் 
    • ஒப்பதில்லா மெய்ப்பொருளைக் கும்பிடுகிறேன்
    • திருவுருவானவனைக் கும்பிடுகிறேன் - தவிது
    • சிம்மாசனாதிபனைக் கும்பிடுகிறேன்
    • குருவென வந்தவனைக் கும்பிடுகிறேன் - யூதர்
    • குருகுல வேந்தனைக் கும்பிடுகிறேன் 
    • அருமை ரட்சகனைக் கும்பிடுகிறேன் - என 
    • தாத்துமாவின் நேசர்தனைக் கும்பிடுகிறேன் --- கும்பிடு

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 600 times