Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

தம் கிருபை பெரிதல்லோ


    • தம் கிருபை பெரிதல்லோ
    • தம் கிருபை பெரிதல்லோ
    • எம் ஜீவனிலும் அதே
    • இம்மட்டும் காத்ததுவே
    • இன்னும் தேவை கிருபை தாருமே 

    • 1. தாழ்மையுள்ளவரிடம் தங்கிடுதே கிருபை
    • வாழ்நாளெல்லாம் அது போதுமே
    • சுகமுடன் தம் பெலமுடன்
    • சேவை செய்ய கிருபை தாருமே

    • 2. நிர்மூலமாகாததும் நிற்பதுமோ கிருபை
    • நீசன் என் பாவம் நீங்கினதே
    • நித்திய ஜீவன் பெற்றுக் கொண்டேன்
    • காத்துக் கொள்ள கிருபை தாருமே

    • 3. தினம் அதிகாலையில் தேடும் புது கிருபை
    • மனம் தளர்ந்த நேரத்திலும்
    • பெலவீன சரீரத்திலும்
    • போதுமே உம் கிருபை தாருமே

    • 4. மாபரிசுத்த ஸ்தலம் கண்டடைவேன் கிருபை
    • மூடும் திரை கிழிந்திடவே
    • தைரியமாய் சகாயம் பெற
    • தேடி வந்தேன் கிருபை தாருமே

    • 5. ஒன்றை ஒன்று சந்திக்கும் சத்தியமும் கிருபை
    • என்றும் மறவேன் வாக்குத்தத்தம்
    • நீதியுமே சமாதானமே
    • நிலை நிற்கும் கிருபை தாருமே

    • 6. ஸ்தோத்திர ஜெபத்தினால் பெருகுதே கிருபை
    • ஆத்தும பாரம் கண்ணீரோடே
    • சோர்வின்றி நானும் வேண்டிடவே
    • ஜெபவரம் கிருபை தாருமே

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 360 times