Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

யூத ராஜசிங்கம்


    • யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் 
    • பல்லவி
    • யூத ராஜசிங்கம் உயிர்த்தெழுந்தார் 
    • உயிர்த்தெழுந்தார், நரகை ஜெயித்தெழுந்தார் 

    • சரணங்கள்
    • 1. வேதாளக் கணங்கள் ஓடிடவே
    • ஓடிடவே, உருகி வாடிடவே --- யூத

    • 2. வானத்தின் சேனைகள் துதித்திடவே 
    • துதித்திடவே, பரனைத் துதித்திடவே --- யூத

    • 3. மரணத்தின் சங்கிலிகள் தெறிபட்டன
    • தெறிபட்டன, நொடியில் முறிபட்டன --- யூத

    • 4. எழுந்தார் என்றதொனி எங்குங் கேட்குதே
    • எங்குங் கேட்குதே, பயத்தை என்றும் நீக்குதே --- யூத

    • 5. மாதர் தூதரைக் கண்டகமகிழ்ந்தார்
    • அகமகிழ்ந்தார், பரனை அவர் புகழ்ந்தார் --- யூத

    • 6. உயிர்த்த கிறிஸ்து இனி மரிப்பதில்லை
    • மரிப்பதில்லை, இனி மரிப்பதில்லை --- யூத

    • 7. கிறிஸ்தோரே நாமவர் பாதம் பணிவோம்
    • பாதம் பணிவோம், பதத்தைச் சிரமணிவோம் --- யூத

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 238 times