Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஐயையா, நான் பாவி


    • ஐயையா, நான் பாவி 
    • பல்லவி
    • ஐயையா, நான் பாவி - என்னை 
    • ஆளும் தயாபரனே! 

    • சரணங்கள்
    • 1. பொய்யாம் உலக உல்லாசாத்தினால் மனம் 
    • போனவழி நடந்தேன் – ஏ 
    • சையா, அபயம்! அபயம்! இரங்கும், பேர்
    • ஐயா, என் தாதாவே --- ஐயையா

    • 2. எத்தனை சூதுகள், எத்தனை வாதுகள், 
    • எத்தனை தீதுகளோ? - எனது 
    • அத்தனே! என் பிழை அத்தனையும் பொறுத்
    • தாண்டருளும், கோவே --- ஐயையா

    • 3. வஞ்சகமோ, கரவோ, கபடோ, மாய் 
    • மாலமோ, ரண்டகமோ? – மனச் 
    • சஞ்சலம் நீக்கி எனக்கருள் செய்யும், 
    • சமஸ்த நன்மைக் கடலே --- ஐயையா

    • 4. பொய்யும், புரட்டும், உருட்டும், திருட்டும், 
    • பொறாமையும், ஆணவமும், விட் 
    • டுய்யும்படி அருள் செய்யும், அனாதி ஓர்
    • ஏகதிரித்துவனே --- ஐயையா

    • 5. உன்னை யாவற்றிலும் பார்க்கச் சிநேகித் 
    • துன தடியார்களையும் – நான் 
    • என்னைச் சிநேகிக்கிறாற்போல் சிநேகிக்க
    • ஏவும், பராபரனே --- ஐயையா
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 394 times