Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஏற்றுக்கொண்டருளுமே


    • ஏற்றுக்கொண்டருளுமே, தேவா!
    • பல்லவி
    • ஏற்றுக்கொண்டருளுமே, தேவா! - இப்போ
    • தேழையேன் ஜெபத்தை இயேசுவின் மூலம் 

    • சரணங்கள்
    • 1. சாற்றின ஆதி ஆயத்த ஜெபமும்,
    • சாந்தமாய் ஜெபித்த பாவ அறிக்கையும்,
    • தேற்றிக் கொண்டருளும் மன்னிப்பின் மருவும்
    • திவ்விய பாதத்தில் வைக்கிறேன், ஸ்வாமி --- ஏற்று

    • 2. குறைவுண்டு இதிலே, அருமைப் பிதாவே
    • குற்றம் மன்னித்திடும் யேசுவின் மூலம்;
    • முறைப்படி கேட்க நான் தெரியாத பாவி;
    • முழுதும் மேசியாமேல் வைக்கிறேன், ஸ்வாமி --- ஏற்று

    • 3. மறுரூப ஆவி வேண்டுமென் ஸ்வாமி;
    • மனமெல்லாம் புதிதாக்கிடும் ஸ்வாமி,
    • சிறுமைப்பட் டடியேன், கேட்கிறேன் ஸ்வாமி
    • தேற்றிடும் புதுபலன் ஊற்றிடும் ஸ்வாமி --- ஏற்று

    • 4. விசுவாசம் பெருகி நிலைத்திடச் செய்யும்;
    • வெளிப்படும் மறைபொருள் பலப்படச் செய்யும்;
    • சிசுவைப்போல் மறுபடி பிறந்திடச் செய்யும்;
    • தேவாவி என்னுளந் தங்கிடச் செய்யும் --- ஏற்று

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 486 times