Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

உன்றன் சுயமதியே


    • உன்றன் சுயமதியே
    • பல்லவி
    • உன்றன் சுயமதியே நெறி என்று
    • உகந்து சாயாதே - அதில் நீ
    • மகிழ்ந்து மாயாதே 

    • சரணங்கள்
    • 1. மைந்தனே, தேவ மறைப்படி யானும்
    • வழுத்தும்மதித னைக் கேளாய் - தீங்
    • கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய் --- உன்றன்

    • 2. சொந்தம் உனதுளம் என்றுநீ பார்க்கிலோ,
    • வந்து விளையுமே கேடு - அதின்
    • தந்திரப் போக்கை விட்டோடு கதிதேடு --- உன்றன்

    • 3. துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
    • திட்ட மதாய் நடவாதே - தீயர்
    • கெட்ட வழியில் நில்லாதே அது தீதே --- உன்றன்

    • 4. சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
    • மிக்க இருக்க நண்ணாதே அவர்
    • ஐக்யம் நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே --- உன்றன்

    • 5. நான் எனும் எண்ணமதால் பிறரை அவ
    • மானிப்பது வெகு பாவம் - அதின்
    • மேல்நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம் --- உன்றன்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 452 times