Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எத்தனை திரள் என் பாவம்


    • எத்தனை திரள் என் பாவம்
    • பல்லவி
    • எத்தனை திரள் என் பாவம் , என் தேவனே!
    • எளியன்மேல் இரங்கையனே 

    • அனுபல்லவி
    • நித்தம் என் இருதயம் தீயதென் பரனே ;
    • நிலைவரம் எனில் இல்லை ; நீ என் தாபரமே --- எத்தனை 

    • சரணங்கள்
    • 1. பத்தம் உன் மேல் எனக்கில்லை என்பேனோ
    • பணிந்திடல் ஒழிவேனோ?
    • சுத்தமுறுங் கரம்கால்கள் , விலாவினில்
    • தோன்றுது காயங்கள் , தூய சிநேகா ! --- எத்தனை

    • 2. என்றன் அநீதிகள் என் கண்கள் முனமே
    • இடைவிடாதிருக்கையிலே ,
    • உன்றன் மிகுங் கிருபை , ஓ மிகவும் பெரிதே
    • உத்தம மனமுடையோய் , எனை ஆளும் ! --- எத்தனை

    • 3. ஆயங் கொள்வோன்போல் , பாவ ஸ்திரீபோல்
    • அருகிலிருந்த கள்ளன் போல் ,
    • நேயமாய் உன் சரண் என் வணங்கினேன்
    • நீ எனக்காகவே மரித்தனை , பரனே ! --- எத்தனை

    • 4. கெட்ட மகன்போல் துட்டனாய் அலைந்தேன்
    • கெடு பஞ்சத்தால் நலிந்தேன் ;
    • இட்டமாய் மகன் எனப் பாத்திரன் அவன் நான்
    • எனை ரட்சித்திடல் உன்றன் நிமித்தமே , அப்பனே ! --- எத்தனை
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1062 times