Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

எங்கும் புகழ் யேசு


    • எங்கும் புகழ் யேசு
    • பல்லவி
    • எங்கும் புகழ் யேசு ராசனுக்கே
    • எழில் மாட்சிமை வளர் வாலிபரே! 

    • அனுபல்லவி
    • உங்களையல்லவோ உண்மை வேதங் காக்கும் ,
    • உயர்வீரரெனப் பக்தர் ஓதுகிறார் --- எங்கும் 

    • சரணங்கள்
    • 1. ஆயிரத் தொருவர் ஆவிரல்லோ நீரும்
    • அதை அறிந்து துதி செய்குவீர் ;
    • தாயினும் மடங்குசதம் அன்புடைய
    • சாமி யேசுவிக்கிதயம் தந்திடுவீர் --- எங்கும்

    • 2. கல்வி கற்றவர்கள் கல்வி கல்லாதோர்க்குக்
    • கடன்பட்டவர்கள் கண்திறக்கவே ;
    • பல்வழி அலையும் பாதை தப்பினோரைப்
    • பரிந்து திருப்ப நிதம் பார்த்திடுவீர் --- எங்கும்

    • 3. தாழ்மை சற்குணமும் தயை காருண்யமும்
    • தழைப்பதல்லோ தகுந்த கல்வி?
    • பாழுந்துர்க்குணமும் பாவச் செய்கையாவும்
    • பறந்தோடப் பார்ப்பதுங்கள் பாரமன்றோ? --- எங்கும்

    • 4. சுத்த சுவிசேஷம் துரிதமாய்ச் செல்ல
    • தூதர் நீங்களே தூயன்வீரரே ;
    • கர்த்தரின் பாதத்தில் காலைமாலை தங்கிக்
    • கருணை நிறை வசனம் கற்றிடுவீர் --- எங்கும்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 427 times