Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆவியை அருளுமே


    • ஆவியை அருளுமே , சுவாமீ 
    • பல்லவி
    • ஆவியை அருளுமே , சுவாமீ , எனக்
    • காயுர் கொடுத்த வானத்தினரசே 

    • சரணங்கள்
    • 1. நற்கனி தேடிவருங் காலங்க ளல்லவோ? 
    • நானொரு கனியற்ற பாழ்மர மல்லவோ? 
    • முற்கனி முகங்காணா வெம்பயி ரல்லவோ? 
    • முழுநெஞ்சம் விளைவற்ற உவர்நில மல்லவோ? --- ஆவியை

    • 2. பாவிக்கு ஆவியின் கனியெனுஞ் சிநேகம், 
    • பரம சந்தோஷம் , நீடிய சாந்தம் , 
    • தேவ சமாதானம் , நற்குணம் , தயவு, 
    • திட விசுவாசம் சிறிதெனுமில்லை --- ஆவியை

    • 3. தீபத்துக் கெண்னையைச் சீக்கிரம் ஊற்றும்;
    • திரி யவியாமலே தீண்டியே யேற்றும் ,
    • பாவ அசூசங்கள் விலக்கியே மாற்றும் ,
    • பரிசுத்தவரந் தந்தென் குறைகளைத் தீரும் --- ஆவியை

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1081 times