Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆத்தும ஆதாயம் செய்குவோமே


    • ஆத்தும ஆதாயம் செய்குவோமே
    • பல்லவி
    • ஆத்தும ஆதாயம் செய்குவோமே - இது 
    • ஆண்டவர்க்குப் பிரியம் - நாமதினால் நாம
    • ஆசீர்வாதம் பெறுவோம் 

    • அனுபல்லவி
    • சாத்திரம் யாவும் தெரிந்த கிறிஸ்தையன்
    • தஞ்சத்தைப் பெற்று நாமிந்த மாவேலையில்
    • ஆத்திரமாக முயற்சி செய்வோமாகில்
    • அற்புதமான பலனை அடையலாம் 

    • சரணங்கள்
    • 1. பாழுலக முழுதையும் ஒருவன் சம்
    • பாதித்துக் கொண்டாலும் - ஒரு
    • நாளுமழியாத ஆத்துமத்தை அவன்
    • நஷ்டப்படுத்தி விட்டால்,
    • ஆளுந்துரையவ னாயிருந்தாலுமே,
    • அத்தால் அவனுக்கு லாபமில்லை யென்று,
    • ஏழை ரூபங் கொண்டு ஞாலமதில் வந்த
    • எம்பெருமான் கிறிஸ்தேசன்று சொன்னாரே --- ஆத்தும

    • 2. கெட்டுப்போன ஆத்துமாக்களை ரட்சிக்க
    • மட்டில்லா தேவசுதன் - வானை
    • விட்டுலகில் கனபாடு பட்டு ஜீவன்
    • விட்டதும் விந்தைதானே;
    • துட்டை யொருத்தியி னாத்துமத்தை மீட்க
    • தூயபரன் முன்னோர் கிணற்றருகிலே
    • இட்டமுடன் செய்த இரட்சணிய வேலையை
    • இந்த நிமிஷமே சிந்தையி லெண்ணியே --- ஆத்தும 
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 861 times