Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆதாரம் நீ தான் ஐயா


    • ஆதாரம் நீ தான் ஐயா
    • பல்லவி
    • ஆதாரம் நீ தான் ஐயா , என்துரையே,
    • ஆதாரம் நீ தான் ஐயா 

    • அனுபல்லவி
    • சூதாம் உலகில்நான் தீதால் மயங்கையில் 

    • சரணங்கள்
    • 1. மாதா பிதாவெனைத் தீதாய் மதிக்கையில்
    • மற்றோர்க்குப் பற்றேதையா , எளியன்மேல்,
    • மற்றோர்க்குப் பற்றேதையா , எளியனுக்கு --- ஆதாரம்

    • 2. நாம் , நாம் துணையென நயந்துரை சொன்னவர்
    • நட்டாற்றில் விட்டாரையா ; தனியனை
    • நட்டாற்றில் விட்டாரையா ; தனியனுக்கு --- ஆதாரம்

    • 3. கற்றோர் பெருமையே , மற்றோர் அருமையே
    • வற்றாக் கிருபை நதியே , என்பதியே
    • வற்றாக் கிருபை நதியே , என்பதியே --- ஆதாரம்

    • 4. சோதனை யடர்ந்து வேதனை தொடர்ந்து
    • துக்கம் மிகுவேளையில் என் சுகிர்தமே,
    • துக்கம் மிகுவேளையில் , உன் தாசனுக்கு --- ஆதாரம்

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 771 times