Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆர் இவர் ஆராரோ


    • ஆர் இவர் ஆராரோ
    • பல்லவி
    • ஆர் இவர் ஆராரோ - இந்த - அவனியோர் மாதிடமே
    • ஆனடை குடிலிடை மோனமாய் உதித்த இவ்வற்புத
    • பாலகனார் ?

    • சரணங்கள்
    • 1. பாருருவாகுமுன்னே - இருந்த - பரப் பொருள் தானிவரோ ? 
    • சீருடன் புவி , வான் , அவை பொருள் யாவையுஞ் சிருட்டித்த 
    • மாவலரோ ? --- ஆர்

    • 2. மேசியா இவர்தானோ ? - நம்மை - மேய்த்திடும் நரர்கோனோ ? 
    • ஆசையாய் மனிதருக்காய் மரித்திடும் அதி அன்புள்ள
    • மனசானோ ? --- ஆர்

    • 3. தித்திக்குந் தீங்கனியோ ? - நமது தேவனின் கண்மணியோ ?
    • மெத்தவே உலகிறுள் நீக்கிடும் அதிசயமேவிய விண்
    • ணொளியோ ? --- ஆர்

    • 4. பட்டத்துத் துரைமகனோ ? - நம்மைப் - பண்புடன் ஆள்பவனோ ?
    • கட்டளை மீறிடும் யாவர்க்கும் மன்னிப்புக் காட்டிடுந்
    • தாயகனோ ? --- ஆர்

    • 5. ஜீவனின் அப்பமோதான் ? - தாகம் தீர்த்திடும்பானமோதான் ?
    • ஆவலாய் ஏழைகள் அடைந்திடும் அடைக்கல மானவர்
    • இவர்தானோ ? --- ஆர்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1376 times