Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆதித் திருவார்த்தை


    • ஆதித் திருவார்த்தை திவ்விய
    • பல்லவி 
    • ஆதித் திருவார்த்தை திவ்விய 
    • அற்புதப் பாலகனாகப் பிறந்தார்;
    • ஆதந் தன் பாவத்தின் சாபத்தை தீர்த்திட
    • ஆதிரை யோரையீ டேற்றிட 

    • அனுபல்லவி
    • மாசற்ற ஜோதி திரித்துவத் தோர் வஸ்து
    • மரியாம் கன்னியிட முதித்து
    • மகிமையை மறந்து தமை வெறுத்து
    • மனுக்குமாரன் வேஷமாய்,
    • உன்ன தகஞ்சீர் முகஞ்சீர் வாசகர்,
    • மின்னுச்சீர் வாசகர் , மேனிநிறம் எழும்
    • உன்னத காதலும் பொருந்தவே சர்வ
    • நன்மைச் சொரூபனார், ரஞ்சிதனார்,
    • தாம் , தாம் , தன்னரர் வன்னரர்
    • தீம் , தீம் , தீமையகற்றிட
    • சங்கிர்த , சங்கிர்த , சங்கிர்த சந்தோ
    • ஷமென சோபனம் பாடவே
    • இங்கிர்த, இங்கிர்த, இங்கிர்த நமது
    • இருதயத்திலும் எங்கும் நிறைந்திட --- ஆதி 

    • சரணங்கள்
    • 1. ஆதாம் சாதி ஏவினர் ; ஆபிரகாம் விசுவாசவித்து
    • யூதர் சிம்மாசனத்தாளுகை செய்வோர்
    • ஈசாய் வங்கிஷனத்தானுதித்தார். --- ஆதி

    • 2. பூலோகப் பாவ விமோசனர் , பூரண கிருபையின் வாசனர்,
    • மேலோக இராஜாதி இராஜன் சிம்மாசனன்
    • மேன்மை மகிமைப் பிரதாபன் வந்தார் --- ஆதி

    • 3. அல்லேலூயா! சங்கீர்த்தனம் , ஆனந்த கீதங்கள் பாடவே
    • அல்லைகள் , தொல்லைகள் எல்லாம் நீங்கிட
    • அற்புதன் மெய்ப்பரன் தற்பரனார் --- ஆதி

  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 973 times