Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

அடைக்கலம் அடைக்கலமே


    • அடைக்கலம் அடைக்கலமே, இயேசுநாதா
    • பல்லவி
    • அடைக்கலம் அடைக்கலமே , இயேசு நாதா, உன்
    • அடைக்கலம் அடைக்கலமே! 

    • அனுபல்லவி
    • திடனற்றுப் பெலனற்றுன் அடியுற்றழும் ஏழைக்கு --- அடைக்கலம் 

    • சரணங்கள்
    • 1. ஆசையோடு பாவமதில் அலைந்து திரிந்தேனே,
    • அன்புள்ள பிதா உனை விட்டகன்று பிரிந்தேனே;
    • மோசமதை யேயலால் மற்றொன்றையும் காணாமலே
    • தோஷமோடு சேர்ந்தனன் துரத்திடாது சேர்த்தருள்! ---அடைக்கலம்

    • 2. கட்டுப்படாக் காயமதின் கெட்ட ரணம் போலவே
    • மட்டுப்படாப் பாவமதில் மயங்கி உறங்கினேன்;
    • கெட்டவனே போவெனக் கிளத்தினும் நியாயமே,
    • கிட்டிவந்தலறும் ஏழை கெஞ்சுதல் கேளய்யனே! --- அடைக்கலம்

    • 3. சிந்திய உதிரமதும் ஐந்து திருக்காயமும்
    • நொந்துரு கெனதுமனச் சஞ்சலமகற்றிடும்;
    • பந்தமிகும் பாவி என்றன் கெஞ்சிடுங் கரத்தினை
    • எந்தவிதமுந் தள்ளாமல் இரங்கிடு மையனே! --- அடைக்கலம்

    • 4. என்னிடத்தில் வருவோரை எந்தவிதமும் தள்ளேன்
    • என்று சொன்ன வாக்கதனில் எனக்கும் பங்கில்லையோ
    • அன்றுனது பக்கமதில் ஆகியிருந்த கள்ளனுக்கு
    • இன்றுபர தீசிலிருப்பா யென்றுரைத்தா யல்லவோ? --- அடைக்கலம்
  • Album: கீர்த்தனைகள், Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 1622 times