Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆண்டவா! மேலோகில்


    • ஆண்டவா! மேலோகில்
    • 1. ஆண்டவா! மேலோகில் உம்
    • அன்பின் ஜோதி ஸ்தலமும்,
    • பூவில் ஆலயமுமே
    • பக்தர்க்கு மா இன்பமே.
    • தாசர் சபை சேர்ந்திட,
    • நிறைவாம் அருள் பெற,
    • ஜோதி காட்சி காணவும்,
    • ஏங்கி உள்ளம் வாஞ்சிக்கும்.

    • 2. பட்சிகள் உம் பீடமே
    • சுற்றித் தங்கி பாடுமே,
    • பாடுவாரே பக்தரும்
    • திவ்விய மார்பில் தங்கியும்;
    • புறாதான் பேழை நீங்கியே
    • மீண்டும் வந்தாற்போலவே,
    • ஆற்றில் காணா நின் பக்தர்
    • ஆறிப்பாதம் தரிப்பர்.

    • 3. அழுகையின் பள்ளத்தில்
    • ஆர்ப்பரிப்பார் உள்ளத்தில்;
    • ஜீவ ஊற்றுப்பொங்கிடும்,
    • மன்னா நித்தம் பெய்திடும்;
    • பலம் நித்தம் ஓங்கியே
    • உந்தன் பாதம் சேரவே,
    • துதிப்பார் சாஷ்டாங்கமாய்
    • ஜீவ கால அன்புக்காய்.

    • 4. பெற மோட்ச பாக்கியம்
    • பூவில் வேண்டும் சமுகம்;
    • ரட்சை செய்யும் தயவால்
    • பாதம் சேர்த்தருள்வதால்,
    • நீரே சூரியன் கேடகம்,
    • வழித்துணை காவலும்;
    • கிருபை மகிமையும்
    • மேலும் மேலும் பொழியும். 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 549 times