Lyrics Home | Browse by Language| Album | Artist | Top Viewed

ஆ இன்ப இல்லமே!


    • ஆ இன்ப இல்லமே!
    • 1. ஆ இன்ப இல்லமே! நீ என்றும்
    • தழைத்து வாழ்க;
    • அன்புடன் பாலர் யாரும் அங்கு
    • ஐக்கியமாய் ஓங்க;
    • அன்னை தந்தை 
    • ஆவலாய்ப் பாலகரை 
    • ஆண்டவன் பாதம் படைக்க.

    • 2. ஆ இன்ப இல்லமே! உன் செல்வம் 
    • சுகம் தழைக்க; 
    • உன் மக்கள் யாவரும் ஓர் வேலை
    • உகந்து செய்ய; 
    • பக்தியுடன் 
    • பற்பல சேவை ஆற்றி, 
    • கர்த்தன் அருள் பெற்று ஓங்க.

    • 3. ஆ இன்ப இல்லமே! நன்மை
    • பெருகும் அந்நாளில்
    • ஆண்டவர் நாமத்தை ஆர்வ 
    • நன்றியுடன் போற்று; 
    • துன்பம் துக்கம்
    • துயரம் தொடர் நாளில் 
    • அன்றும் அவரைக் கொண்டாடு.

    • 4. ஆ இன்ப இல்லமே! உன்
    • உண்மை நண்பர் கிறிஸ்தேசு; 
    • அன்பர் அவர் பிரசன்னம் உன்னை
    • என்றும் நடத்தும்; 
    • இவ்வாழ்வின்பின் 
    • உன் மக்களை அவரே
    • விண்ணோடு சேர்த்துக் காப்பாரே. 
  • Album: பாமாலைகள் , Artist: Unknown Artist, Language: Tamil, Viewed: 792 times